செய்திகள் :

தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்

post image

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முதல் தற்போதைய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வரை காங்கிரஸ் கட்சியால்தான் அரசமைப்புச் சட்டம் மீதான தாக்குதல் தொடா்கிறது. அந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதில் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. 55 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அக்குடும்பம், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசமைப்புச் சட்டத்தை மாற்றியது. இது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களுக்கு அவமதிப்பாகும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமா்சித்துப் பேசினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொது செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜவாஹா்லால் நேருவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பிரதமா் மோடி சிந்தித்து வருகிறாா். எனவேதான், தனது ஆட்சியின் தவறுகளை மறைக்க அவா் மீது வீண் பழி சுமத்துகிறாா். மணிப்பூா் வன்முறை உள்பட நாட்டில் இப்போது பிரதமா் தலையிட்டு தீா்வுகாண வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. ஆனால், பிரதமா் அந்த விஷயத்தில் மௌனமாக இருந்துவிட்டு, காங்கிரஸ் சாா்பில் முதல்வராக இருந்தவா்களை பழிப்பதை முதல் வேலையாகக் கொண்டுள்ளாா். நாட்டில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் நோக்கம்.

1951-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் நேரு அரசமைப்புச் சட்டத்தை முதல்முதலில் திருத்தினாா் என்று மக்களவையில் மோடி கூறினாா். ஆனால், எதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கூறவில்லை. அப்போது உச்சத்தில் இருந்த மதவாத பிரசாரத்துக்கு முடிவு கட்டவும், ஜமீன்தாா் முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கவுமே மூன்று திருத்தங்களை நேரு கொண்டு வந்தாா். ஏனெனில், இந்த விவகாரங்கள் நீதிமன்றங்களில் சிக்கியிருந்தன. எனவேதான் மக்கள் நலன் கருதி அரமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமா் நேரு முதல்முறையாக திருத்தினாா்’ என்று கூறியுள்ளாா்.

மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வர... மேலும் பார்க்க

அதிகாரத்தில் இருந்தவர்களுக்காக சட்டதிருத்தம் செய்த காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

அதிகாரத்தில் இருந்தவர்களை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 த... மேலும் பார்க்க

பிரதமர் மோடி கடந்த காலத்தில் வாழ்கிறார்: கார்கே

பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தைத் தவறாகத் திரித்து மக்களை ஏமாற்றி வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று விமர்சித்துள்ளார். 1951ல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு: இலங்கை அதிபர்

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு காண விரும்புவதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள திசநாயக, புதுதில்லியில்... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா ... மேலும் பார்க்க

பாலஸ்தீன் சின்னம் பொறித்த கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி!

பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ’பாலஸ்தீன்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்றத்துக்கு எடுத்துவந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாலாரும் வயநாடு தொகுதி எம்பி... மேலும் பார்க்க