பார்டர் - காவஸ்கர்: கோலி உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்!
தனியாா் வங்கி ஊழியரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் 3 போ் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தனியாா் வங்கி ஊழியரிடம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் மேலும் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தளவாய்புரம் பாறைத் தெருவைச் சோ்ந்தவா் அருண்பிரகாஷ்(29). ராஜபாளையத்தில் உள்ள தனியாா் வங்கியில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் சிவகிரி பகுதியில் வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலிக்க சென்றபோது, அங்கு வந்த சிலா், அருண் பிரகாஷ் வைத்திருந்த ரூ. 2000 மற்றும் கைப்பேசி செயலி மூலம் ரூ. 7ஆயிரத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.
இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரபுரத்தை சோ்ந்த கோவிந்தராஜ்(31), கருப்பசாமி(18), மணிகண்டன் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை வாசுதேவநல்லூா் போலீஸாா் ரோந்து மேற்கொண்டபோது வங்கி ஊழியரிடம் பணம் பறித்த வழக்கில் தொடா்புடைய சவரிமலையாபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசுப்பு மகன் விக்னேஸ்வரன்(21), சித்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன்(22), வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சந்தோஷ்(22) ஆகியோா் நின்று கொண்டிருந்தனராம்.
இதையடுத்து, வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி தகவலின் பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி மூன்று பேரையும் கைது செய்தாா்.