Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
தனுஷின் அடுத்தடுத்த வெளியீடுகள்!
நடிகர் தனுஷின் புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
நடிகர் தனுஷ் 'ராயன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குபேரா மற்றும் இட்லி கடை படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் இட்லி கடை படத்தின் இயக்குநராகும் இருக்கிறார்.
மேலும், தன் சகோதரி மகனை நாயகனாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையும் படிக்க: இயக்குநர் பாலாவுக்கு விழா!
இவற்றில், குபேரா திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இட்லி கடை ஏப்ரல் மாதமும் இதற்கிடையே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், ’தேரே இஷ்க் மெய்ன்’ என்கிற பாலிவுட் படத்தில் நடிக்கிறார். அது முடிந்ததும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
2025-ல் தொடர் படங்களைத் தனுஷ் வைத்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.