செய்திகள் :

``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்

post image

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'.

இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

'இட்லி கடை'
'இட்லி கடை'

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'இட்லி கடை' குறித்து பகிர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “தம்பி தனுஷ் எழுதி, இயக்கி, நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தேன்.

வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ்.

இட்லி கடை
இட்லி கடை

இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

Bison:``இதுவரைக்கும் ரெண்டு படம் நடிச்சிருக்கேன்; `பைசன்'தான் என்னுடைய முதல் படம்" - துருவ்

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி எனப் பலரும் படத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் ... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் - வைரலாகும் படங்கள்

தமிழ் திரை நட்சத்திரம் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்பட பணிகளில் இருந்து சற்று ஓய்வெடுத்திருக்கும் ரஜினிகாந்த், நெருங்கிய நண்பர்களுடன் இந... மேலும் பார்க்க

சென்னையில் கோலாகலமாக சங்கமித்த நட்சத்திரங்கள் - நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் ‘80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்’ நிகழ்ச்சி, இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீபிரியா... மேலும் பார்க்க

Kantara: `நான் நடிச்சிருக்கேன்னு நிறைய பேருக்கு தெரியாது' - `காந்தாரா' அனுபவம் பகிரும் சம்பத் ராம்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் சாண்டில்வுட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1'. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. விஷுவலாக ... மேலும் பார்க்க

Bison:``மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு!" - `பைசன்' பற்றி பாடகர் சத்யன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்' படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தட... மேலும் பார்க்க