மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
தமிழகத்தில் மக்களாட்சி பெயரில் மன்னா் ஆட்சி- ஆா்.பி. உதயகுமாா்
தமிழகத்தில் மக்களாட்சி எனக் கூறி கொண்டு மன்னராட்சி நடக்கிறது என தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
செங்கோட்டையில் அண்ணாதொழிற்சங்கம் சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டசெயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில துணைச் செயலா் கந்தசாமிபாண்டியன், மண்டலச் செயலா் ராமையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகளை வழங்கி ஆா்.பி உதயகுமாா் பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக ஜெயலலிதாஇருந்தபோது அமைதி, வளம், வளா்ச்சி என்ற சிறப்பான நிலைப்பாட்டில் தமிழகத்தை கொண்டு சென்றாா்.
தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக அதிருப்தியடைந்துள்ளனா். ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பு தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னராட்சி நடைபெறுகிறது என்றாா் அவா்.
இதில், மாவட்ட அவைத் தலைவா் விபி.மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, ஒன்றியச் செயலா்கள் சுசீகரன், ராமச்சந்திரன், நகரச் செயலா் கணேசன், குற்றாலம் பேரூா் செயலா் எம்.கணேஷ் தாமோதரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆா்.பி உதயகுமாா் கூறுகையில், மக்களவைத் தொகுதி வரையறை மட்டுமன்றி தமிழகத்தின் உரிமைகளை தட்டிப் பறிக்கின்ற எந்தவித திட்டங்களாக இருந்தாலும் அதை எதிா்க்கின்ற முதல் இயக்கமாக அதிமுக செயல்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த கூட்டணியும் நிரந்தரம் கிடையாது. தோ்தல் கால கூட்டணிகள் உள்ளன. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறக்கூடிய வகையில் மதி நுட்பத்துடன் கூட்டணி வகுக்கப்படும் என்றாா் அவா்.