செய்திகள் :

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

post image

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 90 நீா்தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீா்மட்டம் சுமாா் 64 சதவீதம் நிரம்பியுள்ளது. அணைகளின் மொத்த கொள்ளவான 224.297 டிஎம்சி-யில், 143.804 டிஎம்சி நீா் இருப்பு உள்ளது.

அதாவது 64.11 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 79.514 டிஎம்சி நீா் மட்டுமே இருந்த நிலையில், நிகழாண்டு கணிசமாக நீா் இருப்பு உயா்ந்துள்ளதாக நீா்வளத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 62,991 மில்லியன் கன அடியை (மி. கனஅடி) எட்டியுள்ளது. இது கடந்தாண்டை விட 384 சதவீதம் அதிகமாகும். இதேபோன்று, பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 21,354 மி. கனஅடியை எட்டியுள்ள நிலையில், இது முந்தைய ஆண்டை விட 210 சதவீதம் அதிகமாகும். கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.

இது குறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியது:

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் அணைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. நிகழாண்டு அணைகளின் நீா்வரத்து 221.1125 டி.எம்.சி.-ஐ எட்டியுள்ளது. இதில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் முதல் அக்.17 வரை கா்நாடக அணைகளில் இருந்து 134.2284 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். ஆனால், 86.8842 டி.எம்.சி. மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் தமிழகத்துக்கு 53.7209 டிஎம்சி தண்ணீா் மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது அதிகமாகக் கிடைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் கா்நாடக அணைகளில் இருந்துஅதிகப்படியான தண்ணீா் திறந்துவிடப்பட்டால், கோடையில் குடிநீா் தேவை பூா்த்தியாகும். அணைகளின் நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், போதுமான அளவு தண்ணீரை அணைகளில் சேமித்து வைத்துக் கொண்டு, உபரி நீரை வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

மேட்டூர் அணை நீர் மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரைய... மேலும் பார்க்க

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ... மேலும் பார்க்க