உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்: மு.க. ஸ்டாலின்
பொன்னேரி: எங்கள் தமிழ்நாடு எப்போதும் தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொன்னேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு மாநிலத்துக்குள் சென்று, அங்குள்ள ஆட்சியை உடைத்து பாஜகவால் ஆட்சியமைப்பதைப் போல தமிழ்நாட்டில் செய்ய முடியாது. தில்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு
2026ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சிதான். உங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்,
எங்கள் தமிழ்நாடு மத்திய அரசுக்கு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் அழைத்து வாருங்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.