தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி! செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியில் பேரவைக் குழுத் தலைவருமான செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையும் காவல்துறையின் அணுகுமுறையையும் மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் நம்முடைய முதல்வர் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் செல்வப்பெருந்தகை பேசுவதாக அதிமுக எம்எல்ஏ அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: திமுக கூட்டணிக் கட்சிகள்!
மேலும், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “குற்றவாளி யாருடன் செல்போனில் பேசினார் என்பதை அவர் பேசிய எண்ணை வைத்து மத்திய அரசு கண்டுபிடித்து வெளியிடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.