Waqf: வக்ஃப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு; என்ன ச...
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!
நடிகர் பாசில் ஜோசஃப் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.
மலையாள திரைத்துறை பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றவர் இயக்குநர், நடிகர் பாசில் ஜோசஃப்.
இயக்குநராக தன் பயணத்தைத் துவங்கியவர் நடிகராகவும் கலக்கிக்கொண்டிருக்கிறார். நடிகர் டொவினோ தாமஸை வைத்து இவர் இயக்கிய மின்னல் முரளி திரைப்படம் இன்றும் பேசப்படுகிறது.
மேலும், நடிகராகவும் பாசில் நடித்த ஃபலிமி, சூட்சுமதர்ஷ்னி, பொன்மேன், மரண மாஸ் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெற்றிபெற்று பாசிலின் மார்க்கெட்டையும் உயர்த்தியிருக்கின்றன. தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாசில் ஜோசஃப் எண்டர்டெயின்மெண்ட் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை விரைவில் அறிவிக்கவும் உள்ளார்.
பாசிலின் இந்த புதிய முயற்சிக்கு நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்