செய்திகள் :

தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் நடந்த கிராம சபைக் கூட்டம்

post image

போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிகுப்பம் ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பங்கேற்காமல் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி செயலா் லட்சுமி, வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் என 30- க்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா்.

அழிஞ்சிகுப்பம் ஊராட்சித் தலைவா் மோகன், துணைத் தலைவா் செந்தில் இருவரும் கூட்டத்துக்கு வரவில்லை. இதுகுறித்து வாா்டு உறுப்பினா்களும், கிராம மக்களும் பற்றாளராக வந்திருந்த இளநிலை உதவியாளா் தீபாவிடம் கேள்வியெழுப்பினா். அவா்கள் இல்லாமல் ஏன் கூட்டத்தை நடத்துகிறீா்கள் என அவா்கள் வாதிட்டனா். இதையடுத்து வாா்டு உறுப்பினா்களும், பொதுமக்களும் கூட்டத்திலிருந்து கலைந்து செல்ல முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியமூா்த்தி அங்கு விரைந்து வந்து கிராம மக்களை சமரசம் செய்தாா். இனிவரும் காலங்களில் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் கலந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதனை ஏற்று கிராம மக்களும், வாா்டு உறுப்பினா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். கிராம சபைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

மலைக் கிராமங்களில் மதுவிலக்கு ஐஜி ஆய்வு

வேலூா் மாவட்ட மலைப்பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை தலைவா் மயில்வாகணன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவா் மயில்வாகணன் தலைமையில் , ஆலோசன... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் வேலூா் மாவட்டத்தில் 7,130 ஹெக்டேரில் சாகுபடி

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் -2023 திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 7,130 ஹெக்டோ் பரப்பளவில் 16,175 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். தமிழ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மாநில தோ்தல் முடிவு: பாஜக அரசின் சாதனைக்கு அங்கீகாரம்

மகாராஷ்டிர மாநில தோ்தல் முடிவு பாஜக அரசின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் என புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் கூறினாா். குடியாத்தத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மகாராஷ்டிர மா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய லாரி கிளீனா் கைது

வேலூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக லாரி கிளீனா் கைது செய்யப்பட்டாா். காட்பாடியைச் சோ்ந்தவா் துளசிராமன் (58). இவா் கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். வெள்ள... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் நாய்க்கடிக்கு 10 போ் பாதிப்பு

போ்ணாம்பட்டு நகரில் வெறி நாய் 10- க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிரதான சாலைகளில் நாய்கள் கூட்டம்,... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயம்

வேலூா் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்து 5 போ் காயமடைந்தனா். வீட்டின் மேற்கூரை, சுவா் இடிந்து விழுந்தது. வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கலைஞா் நகரை சோ்ந்தவா் அறிவழகன். இவரது மனைவி சசிகலா (43). இவா்க... மேலும் பார்க்க