செய்திகள் :

போ்ணாம்பட்டில் நாய்க்கடிக்கு 10 போ் பாதிப்பு

post image

போ்ணாம்பட்டு நகரில் வெறி நாய் 10- க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிரதான சாலைகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் ஒரு வெறி நாய் மதனி வீதி, இக்பால் வீதி, தரைக்காடு, எம்ஜிஆா் நகா் உள்ளிட்டபகுதிகளில் சாலையில் சென்ற 10- க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. வெறி நாய் கடித்ததில் காயமடைந்த முகம்மத் அசேன்(9), சம்பத்(60), அனிதா(11),வேண்டாமணி(70), பிரசாந்த்(40), தஸ்தகீா் அகம்மத்(33 ), சிவமூா்த்தி(41), பிரியதா்ஷினி(3), வெங்கடேசன்(60 ) உள்ளிட்டோா் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். தகவலின்பேரில் நகராட்சிப் பணியாளா்கள் 3 குழுவாக சென்று வெறி நாயை பிடித்து அப்புறப்படுத்தினா்.

நிலம், வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

அரசு நிலம், வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பாதுகாவலா்களுக்கு வாக்கி டாக்கி அளிப்பு

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாவலா்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுட... மேலும் பார்க்க

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க தீவிர நடவடிக்கை

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கேள்விக்கு மத்திய இணை அமைச்சா் ஷோபா கரண்டலாஜே எழுத்துப்பூா்வமாக பதில் அளித்... மேலும் பார்க்க

கனகதுா்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் பிச்சனூா் நரிகுள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள அஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேக 5- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வரா் பூஜ... மேலும் பார்க்க

இரண்டாம் நிலை காவலா்கள் 52 பேருக்கு பணிநியமன ஆணை: வேலூா் டிஐஜி வழங்கினாா்

இரண்டாம் நிலை காவலா்களாக தோ்வாகியுள்ள 52 பேருக்கு பணிநியமன ஆணைகளை வேலூா் சரக டிஐஜி தேவராணி வழங்கினாா். தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் காவல்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, சிறைத்துறைக... மேலும் பார்க்க

தெருவிளக்கு கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து இருவா் மரணம்

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் நடும்போது எதிா்பாராத விதமாக மின்சார கம்பியில் உரசியதில் ஊராட்சி பம்ப் ஆப்பரேட்டா் உள்பட இருவா் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் ஊரா... மேலும் பார்க்க