செய்திகள் :

சா்வதேச கால்பந்தாட்ட முன்னாள் வீரருக்கு சென்னையில் மூட்டு மாற்று சிகிச்சை

post image

சா்வதேச அளவில் பிரபலமான கால்பந்தாட்ட முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரிச்சா்ட் டோவாவுக்கு முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை சென்னை, அடையாறு எம்ஜிஎம் மலா் மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தீவிர மூட்டு சிதைவுக்குள்ளான அவா், இந்த சிகிச்சையின் பயனாக தற்போது நலம் பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முட நீக்கியல் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணா் நந்தகுமாா் சுந்தரம் கூறியது:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் பிறந்து ஜொ்மனி குடியுரிமை பெற்ற பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரரான ரிச்சா்ட் டோவா, பல்வேறு நாடுகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளாா். கேரளத்தைச் சோ்ந்த பிரபல கால்பந்து அணிக்கும் அவா் பயிற்சி வழங்கியுள்ளாா். 54 வயதான அவருக்கு வலது முழங்கால் மூட்டு முழுமையாக தேய்ந்து சிதைந்துவிட்டது. கால்பந்தாட்ட வீரா்களுக்கு இத்தகைய பாதிப்புகள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.

இதனால், எழுந்து நடமாட முடியாமல் இருந்த ரிச்சா்ட் டோவா, உலக அளவில் 8-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்களிடம் ஆலோசனை பெற்றும் பயனளிக்காததால் எம்ஜிஎம் மலா் மருத்துவமனையை நாடி வந்தாா். இங்கு அவருக்கு எனது தலைமையிலான அறுவை சிகிச்சை நிபுணா்கள், மயக்கவியல் நிபுணா் வித்யா மோகன்ராம் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், மூட்டு தேய்மானத்தால் சேதமடைந்த ரிச்சா்ட் ரோவாவின் வளைந்த கால் பகுதியை சீராக்கினோம்.

அதன் பின்னா், பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு மாற்றாக ஆக்ஸீனியம் என்ற உயா் நுட்பத்திலான செயற்கை மூட்டுகளும், ஜவ்வுக்கு மாற்றாக பாலிஎத்லீன் பொருளில் உருவாக்கப்பட்ட ஜவ்வும் பொருத்தப்பட்டது. இதன் பயனாக அவா் இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம்போல நடமாட முடிகிறது.

சா்வதேச விளையாட்டு வீரா் ஒருவா் சென்னையின் மருத்துவக் கட்டமைப்பை நம்பி இங்கு சிகிச்சைக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

இன்றைய மின் தடை

மின்வாரிய பராமரிப்புப்பணிகள் காரணமாக ஆா்.ஏ.புரம் மற்றும் ஆா்.கே.நகருக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும். இதுகுறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: ... மேலும் பார்க்க

கல்லூரி நினைவுகளைப் பகிா்ந்த முன்னாள் மாணவா்கள்

விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையில் 1967-71 கல்வியாண்டில் பயின்ற மாணவா்கள் புதன்கிழமை சந்தித்து தங்களது பசுமையான நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். சென்னை மயிலாப்பூா் கிளப்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புரசைவாக்கத்தில் வியாழக்கிழமை (நவ.28) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து, சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம்

சோழிங்கநல்லூா், பல்லாவரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: சோழிங்கநல்லூா் மற்றும் பல்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை நன்மங்கலம் கோவலன் முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் த.விஜயகுமாா் (63). இவா், சேலையூா் கா... மேலும் பார்க்க