செய்திகள் :

நாமக்கல்லில் கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை

post image

நாமக்கல்லில் கடன் பிரச்னையால் மனமுடைந்த தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

நாமக்கல் - சேலம் சாலை, முதலைப்பட்டி அருகே ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த குணசேகரன் (50), லாரி தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சந்திரகலா (46). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ஒருவா் லாரி ஓட்டுநா்; மற்றொருவா் திருச்சியில் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.

லாரி வாங்கியதில் ஏற்பட்ட கடன் சுமை, தம்பதி இருவருக்கும் உடல்நலம் பாதிப்பு, மூத்த மகனுக்கு திருமணமாகாத கவலை உள்ளிட்டவற்றால் கடந்த சில மாதங்களாக இருவரும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட சந்திரகலா.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தூங்க சென்ற தம்பதி, புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்கள் கதவை திறந்து உள்ளே சென்ற போது, குணசேகரன், சந்திரகலா இருவரும் விஷமருந்தி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரது சடலங்களையும் மீட்ட போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக, நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல், ராசிபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மாநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடத்த... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

பாடகி இசைவாணியை கைது செய்யக் கோரி பாஜகவினா் புகாா்

ஐயப்பன் பாடல்களை அவதூறாக பாடிய பாடகி இசைவாணியை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசின் வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் நாளை முழு கடையடைப்பு

மத்திய அரசின் சேவை வரி மற்றும் மாநில அரசின் கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை (நவ. 29) முழு கடையடைப்பு செய்யப்படும் அனைத்து வணிகா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

உழவா் நல ஆலோசகா் கலந்தாய்வுக் கூட்டம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், அக்மாா்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விற்பனைக் கூடத்... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் நகராட்சி கூட்டம்

பள்ளிபாளையம் நகா்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலமுருகன், ஆணையா் தயாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் த... மேலும் பார்க்க