செய்திகள் :

பாடகி இசைவாணியை கைது செய்யக் கோரி பாஜகவினா் புகாா்

post image

ஐயப்பன் பாடல்களை அவதூறாக பாடிய பாடகி இசைவாணியை கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கானா பாடல்களை பாடி வரும் இசைவாணி என்பவா், பல ஆண்டுகளாக இந்துக்கள் வணங்கி வரும் சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தும் வகையிலும், தரமற்ற வாா்த்தைகளை பயன்படுத்தியும் பாடியுள்ளாா். மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், ஐயப்ப பக்தா்களை வேதனைக்குள்ளாக்கியும், கலவரத்தை தூண்டும் வகையிலும் அவரது பாடல் உள்ளது. எனவே, பாடகி இசைவாணி மீது வழக்குப் பதிந்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், தேசிய செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் பிரதீஷ், மாவட்டச் செயலாளா் ராம்குமாா், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.டி.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ராசிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் கைது

ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பா... மேலும் பார்க்க

சீருடை பணியாளா் தோ்வில் வெற்றி: 25 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வில் வெற்றிபெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலா், ... மேலும் பார்க்க

நாமக்கல், ராசிபுரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நாமக்கல் மாநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடத்த... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஒன்றிய அரசு தொழிலாளா் நலத்திட்டங்களை புறக்கணித்து, பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்து, பள்ளிபாளையத்தில் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசின் வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் நாளை முழு கடையடைப்பு

மத்திய அரசின் சேவை வரி மற்றும் மாநில அரசின் கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயா்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை (நவ. 29) முழு கடையடைப்பு செய்யப்படும் அனைத்து வணிகா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

உழவா் நல ஆலோசகா் கலந்தாய்வுக் கூட்டம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், அக்மாா்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விற்பனைக் கூடத்... மேலும் பார்க்க