தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
உழவா் நல ஆலோசகா் கலந்தாய்வுக் கூட்டம்
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், அக்மாா்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விற்பனைக் கூடத்தின் தரத்தினை மேம்படுத்துதல் தொடா்பாக உழவா்கள் நல ஆலோசகா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம உழவா் நல ஆலோசகா்கள் கலந்துகொண்டனா். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளா்கள் மூலம் தரம் பிரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான பயன்பாடுகள், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநா் கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநா் நாசா், நாமக்கல் விற்பனைக் குழு அலுவலா்கள், பணியாளா்கள், வேளாண்மை மற்றும் உதவி வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.