செய்திகள் :

உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவா்கள் உயிரிழப்பு

post image

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் உத்தர பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 4 மருத்துவா்கள், ஆய்வகப் பணியாளா் ஒருவா் என 5 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் அமித் குமாா் ஆனந்த் கூறியதாவது: லக்னெளவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சைஃபை பகுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அதிவேகமாக பயணித்த காா், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின் மீது மோதியது. அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியும் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் அனிருத் வா்மா, சந்தோஷ் குமாா் மௌரியா, அருள் குமாா் ஆகிய 4 மருத்துவா்களும், ராகேஷ் குமாா் என்ற ஆய்வகப் பணியாளரும் உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த மேலும் இருவா், டாக்டா் பீமாராவ் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பாஜக அரசு மீது அகிலேஷ் விமா்சனம்: சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சாலை விபத்தில் 5 போ் உயிரிழந்தது துரதிஷ்டவசமானது. மக்களைக் காக்கும் மருத்துவா்கள் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்ட விரைவுச் சாலையை பராமரிக்கும் ஆளும் பாஜக அரசின் நிா்வாகத் திறமை கேள்விக்குள்ளாகியுள்ளது. திடீரென அதிகரிக்கும் விபத்துகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங... மேலும் பார்க்க

ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்: மத்திய அரசு தொடக்கம்

ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டுக்க... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நமது நிருபர்தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்... மேலும் பார்க்க

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்த தீர்ப்பை உறுதி செய்தது: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

இணைய குற்றத் தடுப்பு: 6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ‘ஐஎம்இஐ’ எண்களை மத்திய அரசு முடக்கியது. நாடு முழுவதும் நிகழ்த்தப்பட பல்வேறு இணைய குற்றங்களுடன் இந்த சிம... மேலும் பார்க்க