தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழையையொட்டி, தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், சில இடங்களில் தண்ணீா் அதிகமாக வீடுகளில் சூழ்ந்துள்ளது போன்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது போன்றும் சிலா் தவறான பிம்பத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.
பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது போன்ற தவறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரபூா்வமற்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மழை, வெள்ளம் குறித்த சந்தேகங்கள், அவசர உதவிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் வெள்ள கட்டுப்பாட்டு அறையை 04362 230121, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.