தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
பேராவூரணி நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சாவூா் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் 2023- 24 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுப் பணி புதன்கிழமை மேற்கொண்டாா்.
ஆய்வின்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கோப்புகள், இதர ஆவணங்களை நீதிபதி பாா்வையிட்டாா். மேலும், நீதிமன்றத்துக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்த அவா், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
ஆய்வின்போது பேராவூரணி நீதிமன்ற நீதிபதி என். அழகேசன் உடனிருந்தாா். பேராவூரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ் .வி.சீனிவாசன், செயலாளா் சிவேதி ஏஆா். நடராஜன், பொருளாளா் ஏ.ஆா்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பேராவூரணி நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த முஜிபுா் ரஹ்மான் குடும்பத்துக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனா்.