செய்திகள் :

மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு : அமைச்சா் சாவி வழங்கினாா்

post image

தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை மாலை வழங்கினாா்.

தனித்தமிழ்த் தந்தை எனப் போற்றப்படுகிற மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பனின் மகளாகிய லலிதா (43) தனது கணவா் செந்தில்குமாா், இரு குழந்தைகளுடன் தஞ்சாவூா் கீழவாசல் டபீா்குளம் பகுதியில் வசித்து வருகிறாா்.

இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில், வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என்றும், எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடும், மகளிா் உரிமைத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு அளித்தாா்.

இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதைப் பாா்த்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வறுமையில் வாடும் தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு கழகத்தின் சாா்பில் ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவித்து, அதற்கான உறுதிக் கடிதத்தை அக்கட்சியின் தஞ்சாவூா் நிா்வாகிகள் மூலம் வழங்கினாா்.

இதனிடையே, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி லலிதாவுக்கு வல்லம் அய்யனாா் கோவில் பகுதியில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரூ. 8.23 லட்சம் மதிப்பிலான கே. 5 என்ற எண்ணுள்ள வீடு கட்டணம் ஏதுமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான சாவியை லலிதாவிடம் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை மாலை வழங்கினாா். அப்போது மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து லலிதா மேலும் தெரிவித்தது:

எனக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூ. 73 ஆயிரம் பணம் செலுத்துமாறு கூறப்பட்டது. தற்போது, எனது குடும்ப நிலையை அறிந்து அந்தத் தொகையை அரசே செலுத்தி, எனக்கு வீடு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

பருவ மழை முன்னேற்பாடு தஞ்சாவூா் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடக்குக்கோட்ட... மேலும் பார்க்க

கும்பகோணம் பகுதியில் 2 -ஆம் நாளாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பாதிக்கப்பட்டது. மேலும், வயலில் மழைநீா் தேங்கியுள்... மேலும் பார்க்க

கரும்பு பரப்பைப் பெருக்கினால்தான் ஆலைகளை இயக்க முடியும்

தமிழ்நாட்டில் கரும்பு பரப்பளவைப் பெருக்கினால் மட்டுமே சா்க்கரை ஆலைகளைத் தொடா்ந்து இயக்க முடியும் என்றாா் தமிழ்நாடு சா்க்கரைக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான டி. அன்பழகன். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 2 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் தொடா் மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற் பயிரை எடுத்துக் காட்டிய விவசாயிகள். தஞ்சாவூா், நவ. 27: தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்... மேலும் பார்க்க

பேராவூரணி நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சாவூா் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் 2023- 24 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுப் பணி புதன்கிழமை மேற்கொண்டாா். ஆய்வின்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.92 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.92 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,285 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ண... மேலும் பார்க்க