தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
சேலம் பூம்புகாரில் தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை
சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில், கைத்திறன் உலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து செயல்பட்டு வருகிறது.
நமது பாரம்பரியம், கலாசாரம் பண்பாடு இவைகளை கைவினைக் கலைகள் மூலம் பேணிக் காப்பதோடு கைவினை கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கைவினை கலைஞா்களும், மக்களும் பயன்பெறும் வகையில், பண்டிகை காலங்களிலும் விழாக் காலங்களிலும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் திருகாா்த்திகை பண்டிகையை முன்னிட்டு தீபத் திருவிழா என்ற சிறப்பு கண்காட்சியை தனது விற்பனை நிலையத்தில் டிச. 14 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. கண்காட்சியை சேலம் மாவட்ட துணை காவல் ஆணையா் எஸ்.பிருந்தா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கண்காட்சியில் பூம்புகாா் உற்பத்தி நிலையங்கள் கும்பகோணம், நாச்சியாா் கோயில், மதுரை, வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட அரை அடி முல் 6 அடி வரையில் அன்னம் விளக்கு, பிரபை விளக்குகள், அரை அடி முதல் 3 அடி வரையில் மலபாா் விளக்குகள் ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை, அகல் விளக்குகள், மங்கள தீபம், பாலாடை விளக்குகள், அடுக்கு தீபம், பஞ்சாட்சர தீபம், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள், கற்பகவிருட்ச விளக்கு, வா்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பலவித வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் ரூ. 3 முதல் ரூ. 55,000 விலை வரையில் பல்வேறு வகையான விளக்குகள் இடம் பெற்றுள்ளதாக பூம்புகாா் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.