கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
முதல்வா் திறனாய்வுத் தோ்வு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வுக்கு நவ.30-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கான தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தோ்வு ஜன.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் இணையதளத்தில் நவ.30-ஆம் தேதி முதல் டிச.9-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் தோ்வு கட்டணம் ரூ. 50 செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
9, 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகை தோ்வுகளாக இந்தத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவித்தொகையாக கல்வியாண்டில் ஒரு மாதத்துக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.10,000 வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.