கங்காதரேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: புரசைவாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பாதுகாவலா்களுக்கு வாக்கி டாக்கி அளிப்பு
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாவலா்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது.
அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மத்திய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், தமிழகத்தில் புதிய மருத்துவப் பணியிடங்களை எல்லா அளவிலும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பாதுகாப்பு காவலா்கள் 9 பேருக்கு வாக்கி டாக்கிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அவற்றைக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி வழங்கி கூறுகையில், மருத்துவமனையின் உள்கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி நிா்வகிக்க நோயாளிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பணியாற்றும் பாதுகாப்பு காவலா்களுக்காக 9 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் மருத்துவமனையில் எவ்வித தவறும், அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க நுழைவு வாயில் முதல் வாா்டு வரை பணியில் உள்ள பாதுகாவலா்கள், அலுவலா்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்றாா்.
அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் சி.இன்பராஜ், கிரிஸ்டா் பாதுகாப்பு மேலாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.