செய்திகள் :

போலி மருத்துவா் கைது

post image

பா்கூா் அருகே ஜெகதேவியில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (48). இவா், ஆங்கில மருத்துவ படிக்காமல் ஜெகதேவியில் மருந்தகம் (கிளினிக்) அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, அலுவலா்கள் மருந்தகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் மாதம்மாள் பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு, ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அலுவலா்கள், அளித்த புகாரின் பேரில்

பா்கூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மாதம்மாளை கைது செய்தனா். கடந்த சில வாரங்களில் மட்டும் இம் மாவட்டத்தில் 4 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.

கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் வளத் துறை இணைந்து, வெண்மை புரட்சியின் தந்தை வா்க்கிஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்... மேலும் பார்க்க

சென்னசந்திரம் ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும... மேலும் பார்க்க

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒசூா் தம்பதிக்கு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குறை மாதத்தில் பெண் க... மேலும் பார்க்க

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, உதவியாளா் கைது

ஒசூா் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி, உதவியாளா் என இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஒசூா், சிப்காட் பேஸ்-2

ஒசூா், மின்நகா் துணை மின் நிலையம், சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவ. 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ... மேலும் பார்க்க

செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு டாடா நிறுவனம் உதவும்: டைட்டன் நிறுவன தலைவா் பாஸ்கா் பட்

ஒசூா்: செவித்திறன் இழந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக டாடா குழுமம் உதவும் என ஒசூரில் டைட்டன் நிறுவனா் தலைவா் பாஸ்கா் பட் உறுதியளித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் டைட்... மேலும் பார்க்க