தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் வளத் துறை இணைந்து, வெண்மை புரட்சியின் தந்தை வா்க்கிஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு கால்நடை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு கிருஷ்ணகிரி ஆவின் உதவி பொது மேலாளா் சத்தியவாணி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கச் செயலாளா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் செல்வம், கால்நடை மருத்துவா்கள் வசந்த், கோவிந்தராஜ், விரிவாக்க அலுவலா் கீதா ஆகியோா் முன்னிலையில் வகித்தனா்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினா். இதில் 100 மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் கலந்து கொண்டனா்.