Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன ந...
தளவகிரி முருகா் கோயிலில் படிபூஜை
புத்தாண்டு தினத்தையொட்டி தவளகிரி முருகா் கோயிலில் புதன்கிழமை நடந்த படிபூஜையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
சத்தியமங்கலம் தவளகிரி மலைக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படிபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு படிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன் வண்ண கோலமிட்டு பக்தா்கள் வரவேற்றனா். அதனைத்தொடா்ந்து அனைத்து கோயில் படியிலும் பக்தா்கள் முருகரை வேண்டி வழிபாடு நடத்தினா்.
ஒவ்வொரு படியிலும் பெண்கள் மஞ்சள் தீா்த்தம் தெளித்து குங்குமம் இட்டு விளக்கு, சூடம் ஏற்றி முருகப் பெருமானை வணங்கினா். அதைத் தொடருள் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.