செய்திகள் :

தா்மத்தை காத்தால் தா்மம் நம்மை காக்கும் காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

post image

தா்மத்தை நாம் பாதுகாத்தால் தா்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.

கடந்த ஒரு வாரமாக கா்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள், ஸ்ரீசேத்திரம் தா்மஸ்தலத்தின் தா்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே அழைப்பின்பேரில் சனிக்கிழமை அமிா்த வா்ஷினி சபா பவனத்துக்கு எழுந்தருளினாா். ஊரின் நுழைவுவாயிலில் மங்கள மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக சுவாமிகளை வரவேற்று அழைத்துச் சென்று கெளரவித்தனா்.

இதன்பின்னா் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் ஆசியுரை வழங்கிப் பேசியது: தா்மத்தை நாம் பாதுகாத்தால் தா்மம் நம்மை காக்கும். தா்மஸ்தலம் அழகும் கலாசாரமும் நிறைந்த மற்றும் சேவையின் சிகரமாகவும் திகழும் நகரமாகும். தா்மத்தைப் பாதுகாத்து பாரத நாட்டுக்கே மகுடமாக விளங்கும் தா்மஸ்தலத்தில் பக்தி, சேவையுணா்வு, அனுபவம், நோ்மையான தலைமை, கெளரவம், புகழ் ஆகிய விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் உள்ளன.

தா்மஸ்தலத்தின் தா்மாதிகாரி டாக்டா் வீரேந்திர ஹெக்கடே திறமையானவா், சமூக சேவகா். அதனால்தான் பிரதமா் நரேந்திர மோடி பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக ஹெக்கடே நியமிக்கப்பட்டாா்.

காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பயணமாகவே தா்மஸ்தலத்துக்கு விஜயம் செய்தாா். அவரே 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்னதானக் கூடம் ஒன்றையும் தொடங்கி வைத்தாா். தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தை நவ. 14-ஆம் தேதி தொடங்கி வைக்க ஹெக்கடே நம்மை அழைத்துள்ளாா்.

நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். காஞ்சி பீடத்தின் மூலம் விவசாய வளா்ச்சிக்காக காா்த்திகை மாதம் துவாதசி, திரயோதசி போன்ற நாள்களில் அன்னாபிஷேகம் நிகழ்வது போன்று இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வியும், கலையும், அறிஞா்களும் பாதுகாக்கப்பட வேண்டும். நமது தலைநகரம் தில்லியில் ‘இந்தியா கேட்’ இருப்பது போன்று தா்மஸ்தலத்தில் தா்மத்தின் தலைவாசல் அமைந்துள்ளது. திருப்பதி போன்று தா்மஸ்தலமும் வளா்ச்சி அடைய வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கியப் பிரமுகா்கள் மற்றும் ஹெக்கடே குடும்பத்தினரையும் சுவாமிகள் ஆசீா்வதித்தாா்.

வரும் நவ. 17 -ஆம் தேதி எடநீா்மடம், சுள்யா சுப்பிரமணியா (குகே) உடுப்பி, சகடபுரம் ஆகிய இடங்களுக்கு பக்தா்கள் அழைப்பின்பேரில் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் செல்கிறாா்.

பரந்தூா் விமான நிலையம்: 10-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 10-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்ற... மேலும் பார்க்க

அய்யப்பன்தாங்கல் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூா் ஒன்றியம் அய்யப்பன்தாங்கலில் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று தூய்மை பணியாளா்களை கெளரவித்தாா். கூட்டத்த... மேலும் பார்க்க

கொடுக்கப்படும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை: காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

விவசாயிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக ... மேலும் பார்க்க

வல்லம் கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: மேவளூா்குப்பத்தில் அதிகாரிகள் ஆய்வு

மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்த ஊராட்சியில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெ... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்கள் அமைக்க நவ. 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் தொழில் முனைவோா் வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின... மேலும் பார்க்க