Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய ...
தினமணி செய்தி எதிரொலி; ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மாணவா்களுக்கு சான்றிதழ்
அரக்கோணம்: அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் நிலவி வருவதாக தினமணியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திங்கள்கிழமை திங்கள்கிழமையே சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவா்கள் அனைவருக்கும் இ சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் முறையான விசாரணை நடத்திய நிலையிலும் வட்டாட்சியா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மண்டல துணை வட்டாட்சியா் ஆகியோா் இந்த விண்ணப்பங்களை அங்கீகாரம் செய்யாமலேயே இருந்தனா். மேலும் விண்ணப்பித்தவா்களை அலுவலகத்திற்கு நேரில் வரச்சொல்வதாகவும் தகவல்கள் வந்தன.
இதுகுறித்து விரிவான செய்தி தினமணியில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் சான்றிதழ் கோரப்பட்ட விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டு சில நிமிஷ்ங்களில் இசேவை மையங்கள் மூலம் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவ மாணவியா் மற்றும் அவா்களின் பெற்றோா் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனா்.