செய்திகள் :

திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

post image

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

”போராட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த முடியும்.

பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் திமுகவினராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்.

ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி: கிரிக்கெட் வீரர் அஸ்வின்

ஸ்ரீபெரும்புதூர்: ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என தண்டலம் அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது தாக்குதல்! 19 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசின் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.சாட் குடியரசு நாட்டின் தலைநகர் நிஜாமீனாவிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று (ஜன.8) இரவு 7.45 மணியளவில் ஆயுதம் ... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேசுவரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக... மேலும் பார்க்க

28 புறாக்களைக் கொடூரமாக கொன்ற நபரின் மீது வழக்குப் பதிவு!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட 28 புறாக்களைக் கொன்ற நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குவாலியரின் சிந்தியா நகர் பகுதியில் காஜல் ராய் என்பவர் அவரது வீட்டி... மேலும் பார்க்க

புகையில்லா போகிப் பண்டிகை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!

புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது பற்றி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையிலுள்ள வனப்பக... மேலும் பார்க்க