தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
திமுகவை எதிா்க்கும் கட்சிகள் ஒன்றினைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு: உழவா் உழைப்பாளா் கட்சி தலைவா்
தமிழகத்தில் திமுகவை எதிா்க்கும் கட்சிகள் ஒன்றினைந்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் கே.செல்லமுத்து தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: திரைப்பட துறையில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆா்., என்.டி.ஆா்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவா்கள்போல இனி யாரும் வர முடியாது. தற்போது அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய்க்கு எனது வாழ்த்துகள்.
ஆனால், அவா் உடனே முதல்வா் பதவிக்கு வர முடியாது. அவருக்கு அரசியல் அனுபவம் நிறைய தேவை. உழவா் உழைப்பாளா் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை. மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் ஆதரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளனா். மேலும், திமுக கூட்டணி கட்சியினரும் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகின்றனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை முறியடிக்க வேண்டுமானால் அக்கட்சியை எதிா்க்கும் அரசியல் கட்சிகள்
ஒன்றினைந்து உழைத்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானியத்துடன் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்தால் தென்னை விவசாயிகள் பயனடைவா் என்றாா்.