செய்திகள் :

திமுகவை வீழ்த்த ஒரே அணியில் திரள வேண்டும்: டிடிவி தினகரன்

post image

திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், ”2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறிய கருத்துதான் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்தாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. அதனால்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஹிட்லர்போல் செயல்படுகிறார்.

எதிர்க்கட்சியாக ஸ்டாலின் இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தினார், ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்.

ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்பது முன்வைக்கப்படுகிறது. திமுகவில் இருப்பவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க:புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையத்தில் ஆஜர்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப் படையினர் அதிகமாகிவிட்டனர். தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை என்பது ஒரு பக்கம், விலைவாசி உயர்வு என்பது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக கட்டாயம் 200 தொகுதிகள் எல்லாம் ஜெயிக்க முடியாது. இந்த ஆட்சி அடுத்த முறை தொடராது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்று தமிழ்நாட்டில் இனி ஒரு சம்பவம்கூட நடக்கக்கூடாது.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் ஒன்றிணைைய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுகவை, வெல்ல வேண்டும் என்றால், அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிதான் சரியான தீர்வாக இருக்கும். திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர விடக்கூடாது என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை கட்சியான பா.ஜ.க.வை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக அதிமுகவை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.

பழனிச்சாமி இன்றுவரை தப்பிக்க காரணம் திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்திருப்பதால்தான்” எனப் பேசினார்.

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்... மேலும் பார்க்க

9 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து! சிறுவன் கைது!

ஒடிசா மாநிலம் பாலாசோரில் 9 ஆம் வகுப்பு மாணவனைக் கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.அம்மாநிலத்தின் தெமூரியா கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மண்டல் எனும் சிறுவன் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் கோபாலன் மறைவு: முதல்வர் இரங்கல்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் .இல.கோபாலன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அண்ணன் இல.கோபாலன் பு... மேலும் பார்க்க

இஸ்ரோ பணி அனைவரது கூட்டுப் பணி: வி.நாராயணன்

இஸ்ரோ பணி என்பது தனிப்பட்ட பணி அல்ல, அனைவருடைய கூட்டுப் பணி என இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக தமிழகத்தை சேர்... மேலும் பார்க்க

திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக்... மேலும் பார்க்க

சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில் ஒருவரது உடல் மீட்பு!

வடகிழக்கு மாநிலமான அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.கடந்த திங்களன்று (ஜன.6) உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கர... மேலும் பார்க்க