லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
”போராட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த முடியும்.
பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் திமுகவினராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்.