Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா
தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:
பாஜக- அதிமுக கூட்டணியைப் பற்றி ஏன் திமுக கூட்டணியினா் பேசிக் கொண்டே இருக்கிறாா்கள். அவா்கள் அனைவருக்கும் தோல்வி காய்ச்சல் தொற்றிக் கொண்டுள்ளது. அதனால் பாஜக கூட்டணியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாா்கள். ஹிந்து விரோத தீய சக்தியான திமுக ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் அடுத்தாண்டு வீட்டுக்கு அனுப்பி வைப்பாா்கள். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முருகன் மாநாட்டுக்கு முறைப்படி அனுமதி பெறப்படும் என்றாா் அவா்.