செய்திகள் :

திமுக நேற்று முளைத்த காளான் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 51 நிர்வாகிகள் உள்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000 பேர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது.

திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல என்றும், கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என்றும் கூறினார்.

ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக, தமிழகத்துக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை வேண்டும்: டி.ஜெயக்குமார்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம... மேலும் பார்க்க

டி 20 கிரிக்கெட் - மின்சார ரயில்களில் இலவச பயணம்

டி20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: இபிஎஸ்

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி?

சிவகங்கையில் பள்ளி சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் க... மேலும் பார்க்க

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் ... மேலும் பார்க்க

பேருந்து கட்டணம் - 4 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக்கோரி தனியார் பேருந்து ... மேலும் பார்க்க