செய்திகள் :

திமுக - பாஜக இடையே இருப்பது கள்ள உறவல்ல, நல்ல உறவு! சீமான்

post image

திருச்சி: திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியிலேயே உள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:

“வ.உ.சி. கப்பலொட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.

திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

வல்லபாய் பட்டேலை தூக்கி பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர்.

ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆய்வுக்கு செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா?

இதையும் படிக்க : திரைப்பட நாயகி! தன்னந்தனியாக உத்தரகண்ட் கிராமத்தில் வாழும் 80 வயதுப் பெண்!

த.வெ.க. - அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான்.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாது கரம் என்பதல்ல, கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார்.

திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள்” என்றார்.

நாகர்கோவில், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை(நவ. 18) வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!

நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டி... மேலும் பார்க்க

தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!

வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.கழிப்பறையைப் பயன்படுத்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கூறியிருப்பதாவது, பயணிகளி... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கடிநெல்வயல் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அமைப்பை விரிவுபடுத்... மேலும் பார்க்க