செய்திகள் :

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

post image

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மீரா ஜாஸ்மின் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால் இரவு வரை மீரா ஜாஸ்மின் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

meera jasmin
meera jasmin

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், மீரா ஜாஸ்மினின் செல்போன் டவரை வைத்து அவரது இருப்பிடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள சனமங்கலம் பகுதியில் இருக்கும் காப்புக் காடு பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அந்தக் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கண்டனர். அந்தப் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அவர்களின் முதல்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து, உடலை அங்கு எடுத்து வந்து அவரது உடலை எரித்திருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீரா ஜாஸ்மினின் உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த சனமங்கலம்
சம்பவம் நடந்த சனமங்கலம்

அதோடு, அவரைக் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்டர்வியூக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற பெண் காப்புக் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க