திருச்செந்தூா் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வா் அறிவிப்பு
திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானை, நவ.18-ஆம் தேதி பாகன் உதயகுமாா் மற்றும் அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோரை திடீரென தூக்கி வீசித் தாக்கியது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகன் உதயகுமாா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்தச் செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.