அரைசதம் விளாசிய ஆண்ட்ரே ரஸல்; ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு!
திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 4 பேர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதியதில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அரசுப் பேருந்தும் காரும் இன்று மோதியது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநருடன் காரில் பயணம் செய்த ராஜேஷ் (30), ராகுல் (29), சுஜித்( 25) ஆகிய 4 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
மேலும் காரில் பயணம் செய்த சாபு (25 ), சுனில் (35), ரஜினி (40 ) ஆகிய மூவரும் படுகாயங்களுடன் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரன் கரட் மற்றும் நாகை மண்டல அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காரில் வந்தவர்கள் திருவனந்தபுரம் அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளிகள் என்றும் அவர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து எடையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.