திருப்பதி செல்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம்
எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்காக அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.