செய்திகள் :

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; ரயில்வே பாலம் பாதையைச் சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு அருகே அமைந்துள்ளது ரயில்வே பாலம். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதி மக்கள் என அனைவரும் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்குப் பல வருடங்களாகவே பொதுமக்கள் ‌அவ்வழியைக் கடக்க பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து சின்னக்கம்மியம்பட்டு கிராம மக்களிடம் விசாரித்த போது, "இந்த வழியில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த‌ சூழல் இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் சுற்றிக்கொண்டு தான் எங்கள் ஊருக்கு வருகிறோம். ஆனால் நாங்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது ரெட்டியூர் மற்றும் இந்த ரயில்வே வழி‌ தான், காரணம் உணவகங்கள், காய்கறிக் கடைகள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், மருத்துவமனை போன்றவை அமைந்துள்ளன. 

பிரச்னையே தண்ணீர் தேங்குவது தான். அது அப்படியே தேங்காமல் சென்றால், பாதிப்பு இருக்காது. பாதை மிகவும் பள்ளமாகவும், குண்டும் குழியுடனும் இருக்கிறது. போதாதற்கு ஏரியிலிருந்து தண்ணீர் உடைந்து இந்த பாதையில் சேர்கிறது. கிணறுகள் நிரம்பி வழிந்தாலும் இந்த பாதையில் தான் தேங்கி நிற்கும். ஆத்திர அவசரத்துக்கு மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியவில்லை.

மீறி வேகமாகச் சென்றால் வண்டியின் சைலென்சர்க்குள் தண்ணீர் புகுந்து, எங்களுக்குப் பெரிய செலவை ஏற்படுத்தி விடுகிறது. நாங்களும் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் இது தொடர்பாகப் பல முறை கூறியுள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம்‌ என்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் மாறவில்லை. இந்த வழியில் பயணிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஜனவரி 27-ம் தேதி, ஜோலார்பேட்டை ரயில்வே பாலம்: ``பல ஆண்டுகளாகப் புகார் அளித்தும் எதுவும் மாறவில்லை'' - குமுறும் மக்கள்... என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம்.

அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான மூன்றே நாள்களில் (30/01/2025) அன்று அதிகாரிகள் ஜேசிபி‌ இயந்திரத்தின் உதவியுடன் தூர்வாரி தண்ணீர் செல்வதற்கு வழியை ஏற்படுத்தி, மண் கொட்டி பாதையினை சரிசெய்து சமதளப்படுத்தியுள்ளார்கள். ``நாங்கள் செல்வதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தற்கு மிகவும் நன்றி. ஆனால் இது எங்களுக்கு நிரந்தரமான தீர்வாக அமைய விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்" என்கின்றனர் பொதுமக்கள்.

TVK: தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? - தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான காளியம்மாள், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. காளியம்மாள் த.வெ.க-வில் இணைவாரா.. நா.த.க-விலேயே த... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்கள் இடையே கடந்து சென்ற கடலோர காவல் படை கப்பல்: புதிய பாலத்தினை இயக்கி ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின் மீது உருவாக்கப்பட்டது பாம்பன் பாலம். நூற்றாண்டுகளை கடந்து இயங்கிவந்த இந்த ரயில் பாலத்தில் கடல் அரிப்பின் காரணமாக அவ்வப்போது பழு... மேலும் பார்க்க

'ஆளுநர் எங்களுக்கு எதிராகச் செயல்படுவதும் நன்றாகத்தான் இருக்கிறது'- ஸ்டாலின் சொல்வதென்ன?

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செ... மேலும் பார்க்க

Trump: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடித் திட்டம் `குவண்டமோ சிறை'... அதன் திகில் வரலாறு தெரியுமா?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியில் அமர்ந்ததிலிருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையில், திருட்டு, வன்முறை போன்ற குற்றங்களுக்க... மேலும் பார்க்க

Union Budget 2025 : 'ஏறுமா... இறங்குமா?' - பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை... நிபுணர் விளக்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.62,000-த்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும், ஒரு பவ... மேலும் பார்க்க

Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து நிபுணர் கருத்து

இதோ மத்திய பட்ஜெட் தேதி நெருங்கிவிட்டது. நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்.இந்தப் பட்ஜெட்டை நடுத்தர மக்கள் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறார்கள். இதற்கு அதிகரித்து வரும் பணவீக்கம் தான் மிக முக்கிய கா... மேலும் பார்க்க