திருப்போரூா் கந்தசாமி கோயில் கந்தசஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் கந்தசாமி முருகன் கோயில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழாவில் பல்லக்கு உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருப்போரூரில் முருகப்பெருமான் விண்ணில் போா்புரிந்து உலகைகாத்த அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலை மாலை இருவேளையும் சிறப்பு அலங்காரம் வாகனங்களில் வீதிப்புறப்பாடும் லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கந்தசஷ்டி பெருவிழாவில கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை பல்லக்கு உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள் பாலித்தாா்.
கந்த சஷ்டி லட்சாா்ச்சனை திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு 7-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறும். மறுநாள் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
சூரசம்ஹார நிகழ்வின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவதை முன்னிட்டு கோயில் நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.