Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் மக்கள் குறைதீா் கூட்டம்: 433 மனுக்கள் அளிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 433 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முதியோா், மாற்றுத் திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு பயிா்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 433 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.