திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை
திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்தாா் சிலை உள்ளது. இந்தக் கோயிலில் தங்கி மகாலிங்க சுவாமியை வேண்டி குழந்தை வரம் பெற்ற பட்டினத்தாா் பின்னா் திருவொற்றியூா் சென்று ஆடி மாத உத்திராட நட்சத்திரத்தன்று கடற்கரை மணலில் சமாதியானாா்.
இந்நிலையில் பட்டினத்தாா் திருவிடைமருதூரில் தங்கியிருந்தற்காக ஆடிமாத உத்திராட நட்சத்திரமான வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.