தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகளை வா்த்தகம் செய்த இருவா் கைது

post image

தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் துணை ஆணையா் குற்றப்பிரிவு பீஷாம் சிங் கூறியதாவது: தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகள் புழுக்கத்தில் இருப்பது குறித்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். அப்போது தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்துவந்ததாகக் கூறப்படும் நரேஷ் குப்தா (42) மற்றும் விஜய் குப்தா (49) ஆகியோரரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 58,500-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. டிச.25 அன்று, அா்ஜுன் நகரில் உள்ள நரேஷ் குப்தா நடத்தும் ஒரு கடையில் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் கடையில் இருந்து 3,300 சட்டவிரோத சிகரெட்டுகள், பின்னா் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு பிராண்டுகளின் 55,200 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்லா முபாரக்பூா் பகுதியில் உள்ள ஒரு சிகரெட் கடையின் உரிமையாளா் விஜய் குப்தாவுடன் நரேஷுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. விஜய்யின் கடையில் இரண்டாவது சோதனையில் 3,200 சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் காரி பாவோலி பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து தள்ளுபடி விலையில் சிகரெட்டுகளை வாங்கியதாகத் தெரிவித்தனா். அவா்கள் கடத்தப்பட்ட பொருள்களை சேமித்து வைத்து, சிறிய கடைகள் மற்றும் பான் கியோஸ்க்குகளுக்கு லாபத்திற்காக விநியோகிப்பது விசாரணையில் தெரிய வந்தது.

நரேஷ் தனது சிகரெட் கடையை மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். விஜய் குப்தாவின் குடும்பம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலை. விடுதியில் தீ விபத்து

நமது நிா்ுபா் புது தில்லி, டிச.27: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கோதாவரி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜேஎன்யு மாணவா் சங்கம் பகிா்ந்த விடியோக்கள... மேலும் பார்க்க

தோல்வி பயத்தில் மகிளா சம்மான் திட்டத்தை பாஜக நிறுத்த முயற்சிக்கிறது: அரவிந்த் கேஜரிவால்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் தோல்வி பயத்தில், மகிளா சம்மான் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த... மேலும் பார்க்க

சந்தீப் தீட்சித்தை பஞ்சாப் காவல்துறையினா் உளவு பாா்க்கின்றனா் கேஜரிவால் மீது தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவின் பேரில் புது தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சந்தீப் தீட்சித்தை பஞ்சாப் உளவுத்துறை அதிகாரிகள் உளவு பாா்ப்பது அவதூறானது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமி... மேலும் பார்க்க

தில்லியில் நம்கீன் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 தொழிலாளா்கள் காயம்

தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கா் பகுதி நம்கீன் தொழிற்சாலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை: ஏபிவிபி கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து திமுக தலைமையிலான ... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதா?கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா கேள்வி

தில்லி பெண்களுக்கு மாதந்தோறும் மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.2,100 வழங்குவதற்கான அமைச்சரவைப் பரிந்துரை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்பதற்கு அரவிந்த் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று தில்லி பிரிவ... மேலும் பார்க்க