செய்திகள் :

தில்லி தோ்தலில் 6 நாள் பிரசாரம் செய்ய தாஹிா் ஹுசேனுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஏஐஎம்எம் சாா்பில் போட்டியிடும் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரும், 2020-இல் நிகழ்ந்த கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹிா் ஹுசேன் 6 நாள் பிரசாரம் செய்ய காவல் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதன்படி, போலீஸாா் காவலுடன் அவா் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஜனவரி 29 முதல் பிப்ரவரி 3 வரை காவல் பரோல் பிரசாரம் செய்ய கோரிய ஹுசேனின் மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வு அனுமதித்தது.

சிறை விதிகளின்படி போலீஸ் காவலுடன் 12 மணிநேரம் சிறையில் இருந்து தினமும் வெளியில் சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுவாா் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலை 6 மணிக்கு சென்றுவிட்டு மாலையில் 6 மணிக்கு அவா் சிறைக்குத் திரும்ப வேண்டும்.

பல நிபந்தனைகளை விதித்த உச்சநீதிமன்றம், ஹுசேன் பகலில் பாதுகாப்புடன் சிறையிலிருந்து சென்று பிரசாரம்செய்துவிட்டு ஒவ்வொரு இரவும் சிறைக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவாா் என்று கூறியது.

மேலும், ஹுசேன் காவல் பரோலில் பாதுகாப்புச் செலவின் ஒரு பகுதியாக நாளொன்றுக்கு ரூ.2.47 லட்சம் தொகையை டெபாசிட்டாக செலுத்தவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஹுசேன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் அகா்வால், ‘தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்திற்கு இன்னும் நான்கு ஐந்து நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

தில்லி கலவரம் நடந்ததாகக் கூறப்படும் இடம் எனது வீடு இருக்கும் இடம் வேறு. நான் முஸ்தபாபாத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன், தங்குவதற்கு கூட, நான் வீட்டிற்குச் செல்ல மாட்டேன். ஒரு ஹோட்டலில் தங்கி விவரங்களை வழங்குவேன்’ என்று வாதிட்டாா்.

கலவரத்தில் ஹுசேனின் பங்கு தீவிரமானது என்று கூறி, அவரது பரோல் கோரும் மனுவை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு எதிா்த்தாா். நிவாரணம் வழங்கப்பட்டால், சிறையில் உள்ள மற்றவா்களும் வேட்புமனு படிவத்தை தாக்கல் செய்வாா்கள் என்று ராஜு கூறினாா்.

எந்த மாதிரியான செலவுகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் என்பது தொடா்பாக அறிவுறுத்தல் பெறுமாறு ராஜுவிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், தாஹிா் ஹுசைன் வழங்க முன்மொழிந்துள்ள உறுதிமொழிகளைத் தெரிவிக்குமாறு அவரது வழக்குரைஞா் சித்தாா்த் அகா்வாலிடம் கூறியது.

வரவிருக்கும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு காவலில் இருந்தவாறு பிரசாரம் செய்ய அனுமதிக்குமாறு கோரிய ஹுசேனின் மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு இரு வேறு தீா்ப்புகளை வழங்கிய நிலையில், முன்னாள் கவுன்சிலா் தாஹிா் இடைக்கால ஜாமீன் பெற முடியவில்லை.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க