'அண்ணாமலைக்கு வரவேற்பா?' - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman ...
தில்லி மின்சார வாகனக் கொள்கை: மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!
தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிஷி கூறுகையில்,
தலைநகரில் நிகழ்ந்துவரும் மோசமான காற்றின் தரத்தையடுத்து, மின்சார வாகனக் கொள்கையை நீட்டிக்க தில்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்கள் அதாவது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட உள்ளது. மேலும், ஜனவரி 1 முதல் நிலுவையில் உள்ள மானியங்கள் மற்றும் சாலை வரிக்கு விலக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
ஜனவரி 1,2024 மற்றும் அதற்குப் பிறகு வாங்கிய மின்சார வாகனங்களுக்கு மானியம் மற்றும் சாலை வரி விலக்கு அளிக்கப்படும். அரவிந்த் கேஜரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டபோது பாஜகவால் நிறுத்தப்பட்டது. என்று அவர் கூறினார்.
மேலும், தில்லி அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதற்காக ரூ.17 கோடி மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
குரு நானக் கண் மையத்தில் புதிய பிரிவில் ஆப்டோமெட்ரியில் நான்கு ஆண்டு இளங்கலை கல்வியையும் அதிஷி தொடங்கியுள்ளார்.