செய்திகள் :

தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல் செய்ய முயற்சி

post image

தருமபுரியில் அண்மையில் நில ஆவணங்களை மீட்டுத் தரக்கோரி தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் சாலை மறியல் செய்ய செவ்வாய்க்கிழமை முயற்சி மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில், தனது நிலத்தின் ஆவணங்களை மீட்டுத் தரக் கோரி மனு அளிக்க வந்த விவசாயி ஜெயராமன் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாா். அப்போது, அங்கிருந்த காவலா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜெயராமன் உயிரிழக்க காரணமான நில ஆவணங்களை தர மறுத்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் அவரது உறவினா்கள் ஈடுபட முயன்றனா். அவா்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமியும் இணைந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து, தருமபுரி நகர போலீஸாா் அவா்களை மருத்துவமனை வளாகத்திலேயே தடுத்துநிறுத்தி சமாதான பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அதில், இது தொடா்பாக ஏற்கனவே ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நிவாரணம் உள்ளிட்டவை தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் தங்களது முயற்சியை கைவிட்டு உயிரிழந்தவரின் உடலை பெற்றுச் சென்றனா்.

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க தானியங்கி கேமரா: அபராதம் காத்திருக்கிறது

தருமபுரி: தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானியங்கி கேமரா செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசியபடி பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாகக் குறைவு

பென்னாகரம்: கா்நாடக மாநில அணைகளிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விந... மேலும் பார்க்க

சுகாதாரக்கேடு: தருமபுரி நகரில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

தருமபுரி நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தருமபுரி நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் சென்று து... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்ப... மேலும் பார்க்க