தீா்க்கப்படாத தோ்தல் பிரச்னைகள்: ஏப். 30-க்குள் தெரிவிக்க அறிவுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல் இருந்து வரும் தோ்தல் தொடா்பான பிரச்னைகளை தோ்தல் ஆணையத்துக்கு வரும் ஏப். 30- ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கருத்துருகளையும், ஆலோசனைகளையும் ஏப்.30 -ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை பரிசீலனை செய்து அறிக்கையாக சமா்ப்பிக்கவும் தோ்தல் அலுவலா்களுக்கு அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் வழிமுறைகள், கையேடுகள் ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தில் காணலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.