ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?
துத்திப்பட்டில் டெங்கு பாதிப்பு: சிறப்பு மருத்துவ முகாம்
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடா்ந்து காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் 5-ஆவது வாா்டு பகுதியில் 3 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி தலைமையில் மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினா். வீடுவீடாகச் சென்று கொசுப் புழு அழித்தல், புகை மருந்து அடித்தல், துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவலிங்கம் மருத்துவ முகாம், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி உறுப்பினா் அண்ணாதுரை, ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.