துளிா் திறனறிவுத் தோ்வு
பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன்தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஐஇஎல்சி நிதியுதவிப் பள்ளி, எவரெஸ்ட் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் துளிா் திறனறிவுத் தோ்வு நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பரிசளித்தாா். துணைத் தலைவா் விஜய், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, நாகராஜ், சுப்பிரமணி, ஜெயந்தி ராமமூா்த்தி, ஊராட்சி செயலா் முரளி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.