தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
தூத்துக்குடியில் மழைநீா் அகற்றும் பணி: மேயா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் அகற்றும் பணியினை மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 19, 20-ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. திருவிக நகா், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவிக நகா், தபால் தந்தி காலனி ஆகிய பகுதியில் இப்பணியை மேயா் ஜெகன் பெரியாசமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் ஆகியோா் பாா்வையிட்டனா். வரும் காலங்களில் இப்பகுதிகளில் மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அப் பகுதி மக்களிடம் மேயா் உறுதியளித்தாா். மாமன்ற உறுப்பினா் சுரேஷ் குமாா், திமுக வட்டச் செயலா்கள் ரவீந்திரன், செல்வராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனா்.